வில்லியனூர் அருகே வேளாண் கூட்டுறவு வங்கி மேலாளர் தற்கொலை
வில்லியனூர் அருகே வேளாண் கூட்டுறவு வங்கி மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வில்லியனூர், ஜன.
வில்லியனூர் அருகே வேளாண் கூட்டுறவு வங்கி மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கூட்டுறவு வங்கி மேலாளர்
வில்லியனூர் அருகே அரியூர் குமரன் நகரை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 54). இவர் அரியூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கலா என்ற மனைவியும், சுகந்தி என்ற மகளும், தேவநாதன் என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த கூட்டுறவு வங்கியில் இளங்கோ என்பவருக்கு ரூ.3 லட்சம் வங்கி கடன் பெறுவதற்காக குப்புசாமி ஜாமீன் கையெழுத்து போட்டுள்ளார். கடன் பெற்ற இளங்கோ, அதனை திருப்பி கட்டாததால் குப்புசாமியின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டது.
தூக்கில் தொங்கினார்
இது தொடர்பாக குப்புசாமி இளங்கோவிடம் கூறி, தனது சம்பளத்தில் பிடித்தம் செய்த பணத்தை கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் குப்புசாமி குடும்ப செலவிற்கு பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனை அவருடன் வேலை செய்யும் சக ஊழியர்கள் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக குப்புசாமி மனவேதனையில் இருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு குப்புசாமி தனது வீட்டில் உள்ள குளியல் அறையில் மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சாவு
இதை பார்த்த அவரது குடும்பத்தினர், குப்புசாமியை தூக்கில் இருந்து இறக்கி அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே குப்புசாமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக வில்லியனூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story