கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஞாயிறு முழு ஊரடங்கால் வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஞாயிறு முழு ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கினர்
விழுப்புரம்
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. முக்கிய சாலைகள் அனைத்தும் வாகன போக்குவரத்து ஏதுமின்றி வெறிச்சோடி கிடந்தது.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் பால்பூத்துகள், மருந்துகடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. வாகன போக்குவரத்து முடங்கியதால் பிரதான சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. முக்கிய இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து போலீசாரும், வருவாய்துறையினரும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இறைச்சி கடைகளுக்கு அபராதம்
பகண்டை கூட்டுரோட்டில் தடையை மீறி செயல்பட்ட 3 இறைச்சி கடைகளுக்கு வருவாய்த்துறையினர் அபராதம் விதித்தனர். மேலும் தேவையில்லாமல் இருசக்கர வாகனத்தில் சுற்றி திரிந்த 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர்.
அதேபோல் மூங்கில்துறைப்பட்டு, திருக்கோவிலூர், சங்கராபுரம், சின்னசேலம் என மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வாகன போக்குவரத்து தடையால் சாலைகள் வெறிச்சோடின.
Related Tags :
Next Story