2 வது நாளாக 200ஐ தாண்டிய கொரோனா


2 வது நாளாக 200ஐ தாண்டிய கொரோனா
x
தினத்தந்தி 9 Jan 2022 11:06 PM IST (Updated: 9 Jan 2022 11:06 PM IST)
t-max-icont-min-icon

2வது நாளாக 200ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு

அனுப்பர்பாளையம்
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில் கடந்த 7-ந்தேதி தினசரி பாதிப்பு திடீரென 127-ஆக மாறியது. இதேபோல் நேற்று முன்தினம் அதையும் தாண்டி 226-ஆக அதிகரித்தது. இந்த நிலையில் நேற்று திருப்பூர் மாவட்டத்தில் 219 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 99 ஆயிரத்து 577-ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 48 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்து 654-ஆக அதிகரித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் முழுவதும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 728 பேர் திருப்பூர், கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று கொரோனாவுக்கு பலி இல்லை. இதனால் கொரோனா பலி எண்ணிக்கை 1028-ஆக உள்ளது.

Next Story