சங்கராபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தல்
சங்கராபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தல் தப்பி ஓடிய 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
சங்கராபுரம்
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்(பயிற்சி) சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் புதுப்பாலபட்டு அரசு உயர்நிலைப்பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தவழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது அவர்கள் மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர் மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது அதில் சாக்குப்பையில் 40 லிட்டர் சாராயம் இருந்ததை கண்டுபிடித்த போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து தப்பி ஓடிய 2 மர்ம நபர்களையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story