‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலையை சீரமைப்பார்களா?
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா கொண்டையம்பட்டி கிராமத்தின் மேற்கு தெருவில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நிறைவடையாமல் உள்ளது. இதனால் நடந்து செல்பவர்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, இப்பகுதியில் உள்ள பேவர் பிளாக் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், வாடிப்பட்டி.
பூங்கா வேண்டும்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்களத்தில் அரசன் ஊருணி உள்ளது. இந்த ஊருணி கரையில் பூங்கா அமைத்து கொடுத்தால் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பொழுதினை போக்கவும், நடைபயிற்சியை மேற்கொள்ளவும் பயன்படும். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
காதர் மீரா, ஆர்.எஸ்.மங்களம்.
வீணாகும் குடிநீர்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா மடப்புரம் பஞ்சாயத்து மடப்புரம் விளக்கு ஜி.ஆர்.நகரில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் சாைலயில் வழிந்தோடி வருகிறது. வீணாகும் குடிநீர் சாலையில் தேங்குவதால் சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. மேலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, குடிநீர் குழாய் உடைப்பை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
கார்த்தி, திருப்புவனம்.
குவிந்து கிடக்கும் குப்பை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பிச்சாண்டி தெருவில் உள்ள ஓடையில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி அடைத்துள்ளது. குப்பை மற்றும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு நோய் பரவி வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
கருப்பன், சிவகாசி.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
மதுரை மாவட்டம் கருப்பாயூரணி லட்சுமணன் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதன் காரணமாக போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சசிகுமார், கருப்பாயூரணி.
நாய்கள் தொல்லை
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கொண்டுலாவி கிராமத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. நாய்கள் தெருவில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் துரத்தி, துரத்தி கடிக்கிறது. நாய்க்கடியால் தினமும் பலர் பாதிக்கப்படுகின்றனர். பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
முருகன், கொண்டுலாவி.
குண்டும், குழியுமான சாலை
மதுரை மாவட்டம் தனக்கன்குளம் சமாதானம் நகரில் குடிநீர் குழாய் அமைப்பதற்காக குழி தோண்டப்பட்டது. ஆனால் இந்த பள்ளத்தை சரியாக மூடாமல் சென்றுள்ளனர். இதனால் சாலை குண்டும், குழியுமாக மாறிவிட்டது. வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. வாகன ஓட்டிகளின் நலன்கருதி குண்டும், குழியுமான சாலையை சீரமைப்பார்களா?
செண்பகராஜ், மதுரை.
Related Tags :
Next Story