ஒரே நாளில் 70 பேருக்கு கொரோனா
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 70 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 70 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
வேகமாக பரவுகிறது
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 4-ந்தேதி அன்று 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இந்த நோயின் பரவல் 5 நாட்களில் 6 மடங்கு உயர்ந்து அதிவேகமாக பரவி வருகிறது.
5-ந்தேதி அன்று 17 பேருக்கும், 6-ந்தேதி அன்று 19 பேருக்கும் 7-ந் தேதி அன்று 33 பேருக்கும், 8-ந்தேதி அன்று 60 பேருக்கும், நேற்று ஒரே நாளில் 70 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
போலீசாருக்கு தொற்று
இதில் ஆரம்ப சுகாதார பணியாளர் ஒருவர், சிவகங்கையை சேர்ந்த போலீஸ்காரர்கள் 2 பேர், காரைக்குடி மத்திய தொழிற்பாதுகாப்பு படை போலீஸ்காரர் ஒருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தற்போது கொரோனா 3-வது அலை காரணமாக நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் அத்தியாவசிய பணிகள் இருந்தால் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைபிடித்து சென்று வர வேண்டும் என்றும் ஒலிபெருக்கிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே கொரோனா தொற்று பாதித்தவர்கள் தங்கி இருந்த இடத்தை சுற்றி கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story