இன்றும், நாளையும் மின்சார நிறுத்தும் இடங்கள்


இன்றும், நாளையும் மின்சார நிறுத்தும் இடங்கள்
x
தினத்தந்தி 9 Jan 2022 6:32 PM GMT (Updated: 2022-01-10T00:02:38+05:30)

இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தும் இடங்கள் விவரம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி துணை மின்நிலையத்தில் இன்று(திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே சிங்கம்புணரி நகர்,காசிப்பிள்ளை நகர், அம்பேத்கர் நகர், சந்தி வீரன் கூடம், கண்ணமங்கலபட்டி, அரசினம்பட்டி, சிவபுரிபட்டி, குறிஞ்சி நகர், முத்துவடுகநாத சுவாமி நகர், நாட்டார்மங்கலம், நாகப்பன் செவல்பட்டி, பிரான்மலை, அணைக்கரைப்பட்டி, கிருங்காக்கோட்டை, ஒடுவன்பட்டி, மேலப்பட்டி, செல்லியம்பட்டி, கோட்டை வேங்கைபட்டி, செருதப்பட்டி, காளாப்பூர், சதுர்வேதமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் செல்லத்துரை தெரிவித்து உள்ளார்.
இளையான்குடி துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே இளையான்குடி, புதூர், கண்ணமங்கலம், தாயமங்கலம், சோதுகுடி, கருஞ்சுத்தி, நகரகுடி, குமாரக்குறிச்சி, கீழாயூர், கீழாயூர் காலனி ஆகிய கிராமங்களில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.இந்த தகவலை மின்செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்து உள்ளார்.


Next Story