மேலும் 168 பேருக்கு கொரோனா


மேலும் 168 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 10 Jan 2022 12:25 AM IST (Updated: 10 Jan 2022 12:25 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 47,116 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 45,962 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 23 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 605 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவதோடு, வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு நேற்று யாரும் பலியாகவில்லை. விருதுநகர் ெரயில்வே பீடர் ரோட்டில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில் இந்த அலுவலகம் அருகில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் குடியிருப்பவர்களுக்கு  பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 7 வயது சிறுவன் உள்பட 3 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனை தொடர்ந்து நகராட்சி சுகாதாரத்துறையினர் அப்பகுதியில் தற்போது நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Next Story