வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 241 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஒரே நாளில் 241 பேருக்கு கொரோனா பாதிப்பு
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனாலும் தினசரி தொற்றின் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் 191 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையின் முடிவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 241 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக அரசு, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். லேசான கொரோனா அறிகுறி காணப்படும் நபர்கள் வீடுகளிலேயே சிகிச்சை எடுத்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 241 பேரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் உடன் பணிபுரிந்த அனைவருக்கும் தொற்று பரிசோதனை செய்யப்படும். பொதுமக்கள் கொரோனா பாதிப்பில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story