பட்டுக்கோட்டை, கும்பகோணம் பகுதிகளில் கடைகள் அடைப்பு
முழு ஊரடங்கையொட்டி பட்டுக்கோட்டை, கும்பகோணம் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
பட்டுக்கோட்டை:
முழு ஊரடங்கையொட்டி பட்டுக்கோட்டை, கும்பகோணம் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
பட்டுக்கோட்டை
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு மற்றும் வாரத்தின் இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது.
நேற்று முழு ஊரடங்கையொட்டி பட்டுக்கோட்டை கடைத்தெருக்களில் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. ஆட்டோக்கள் இயங்கவில்லை. மருந்து கடைகள், பெட்ரோல் பங்குகள், ஏ.டி.எம். மையங்கள் மட்டும் இயங்கின. ஓட்டல்களில் காலை 7 மணி முதல் பார்சல் மூலம் உணவு வழங்கப்பட்டது. போலீசார் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கபிஸ்தலம்
முழு ஊரடங்கையொட்டி கபிஸ்தலம் மற்றும் சுவாமிமலை பகுதிகளில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைகளுக்காக மருந்து, பால் கடைகள் மற்றும் உணவகங்கள் செயல்பட்டன. கபிஸ்தலம் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி தலைமையில் போலீசாரும், சுவாமிமலை பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலமையில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருச்சிற்றம்பலம், திருப்பனந்தாள்
திருச்சிற்றம்பலம், செருவாவிடுதி, ஒட்டங்காடு உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் கடைவீதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஊரடங்கின் போது சாலைகளில் சுற்றித்திரிந்தவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த திருச்சிற்றம்பலம் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
திருப்பனந்தாள், அணைக்கரை, பந்தநல்லூர், கதிராமங்கலம், கஞ்சனூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் கடைகள் அடைக்கப்பட்டதால் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் கோவில், கஞ்சனூர் சுக்கிரன் கோவில்கள் திறக்கவில்லை. இதனால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். ஊரடங்கின் போது அணைக்கரையில் உள்ள மீன் அங்காடியில் மீன்விற்பனை நடைபெற்றது. தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிவேந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீன் அங்காடியை மூட நடவடிக்கை எடுத்தனர்.
அதிராம்பட்டினம், மதுக்கூர்
அதிராம்பட்டினத்தில் பஸ் நிலையம், கடைத்தெரு, பழைய தபால் நிலைய சாலை, சேர்மன் வாடி, வண்டிப்பேட்டை, கிழக்கு கடற்கரைச்சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மளிகை, காய்கறி, இறைச்சி உள்ளிட்ட கடைகள் மூடப்பட்டு இருந்தது. இதனால் பொதுமக்கள் நேற்று வெளியில் வராமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.
மதுக்கூர் பகுதியில் வணிக வளாகங்கள், கடைகள் மூடப்பட்டு இருந்தன. உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்கப்பட்டன. அனைத்து கடைகளும் மூடப்பட்டதால் சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. ஊரங்கையொட்டி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
பேராவூரணி, அய்யம்பேட்டை
பேராவூரணியில் 600-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனால் பேராவூரணி முதன்மைச்சாலை, ஆவணம் சாலை, சேது சாலை, அறந்தாங்கி சாலை ஆகிய பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தனர்.
அய்யம்பேட்டை சாவடி பஜார், பஸ் நிறுத்தம், மதகடிபஜார் பகுதியிலும், பசுபதிகோவில் சக்கராப்பள்ளி, வழுத்தூர், கணபதி அக்ரகாரம் ஆகிய ஊர்களிலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் கும்பகோணம் - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையிலும், திருவையாறு - கும்பகோணம் நெடுஞ்சாலையும் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அய்யம்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே போலீசார் தடுப்புகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் செய்திருந்தனர்.
பாபநாசம்,கும்பகோணம்
பாபநாசம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் பொதுமக்கள் வாகனங்களில் சென்று வந்தனர். தேவையின்றி வாகனங்களில் சுற்றித் திரிபவர்களளையும், முக கவசம் அணியாதவர்களையும் போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். பாபநாசம் போலீஸ் துணை சூப்பிரண்டு பூரணி தலைமையில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பகவதி சரணம், சப் - இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
கும்பகோணத்தில் உள்ள 7 ஆயிரம் கடைகள் நேற்று அடைக்கப்பட்டன. இதனால் பஸ் நிலையம், ெரயில்வே நிலையம், உச்சி பிள்ளையார் கோவில் வீதி, காந்தி பார்க், பழைய பாலக்கரை, கும்பகோணம் தாராசுரம் காய்கறி மார்க்கெட் ஆகிய இடங்களில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஊரடங்கின் போது தேவையில்லாமல் வெளியே சுற்றித்திரிந்த 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
திருவிடைமருதூர்
திருவிடைமருதூர் மற்றும் திருபுவனம், ஆடுதுறை, திருநாகேஸ்வரம், நாச்சியார்கோவில் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. ஊரடங்கின் போது முககவசம் அணியாமல் வந்தவர்களையும், தேவையின்றி வாகனங்களில் சுற்றித்திரியந்தவர்களையும் போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பினர்.
Related Tags :
Next Story