குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்


குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்
x
தினத்தந்தி 10 Jan 2022 1:15 AM IST (Updated: 10 Jan 2022 1:15 AM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டை நீரேற்று நிலையம் அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகுவதால் அதிகாரிகள் கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை நீரேற்று நிலையம் அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகுவதால் அதிகாரிகள் கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
குழாயில் உடைப்பு
பட்டுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் கொண்டிகுளம் கிராமத்தில் மகாராஜசமுத்திரம் காட்டாறு அருகே பட்டுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் நீரேற்று நிலையம் உள்ளது. இங்கு இருந்துதான் பட்டுக்கோட்டை நகரின் ஒரு பகுதிக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்தநிலையில் கொண்டிகுளம் நீரேற்று நிலையத்தில் உள்ள பெரிய அளவிலான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அறந்தாங்கி சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 
சீரமைக்க கோரிக்கை 
இதனால் பட்டுக்கோட்டை நகருக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு கூடுதல் அழுத்தத்துடன் தண்ணீர் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பட்டுக்கோட்டை நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த 2 நாட்களாக உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதை கவனித்து குடிநீர் குழாயை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story