கடையை திறந்து வியாபாரம் செய்தவர்களுக்கு அபராதம்
கடையை திறந்து வியாபாரம் செய்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்த நிலையில் அரசு கூறும் விதிமுறைகளை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முறையாக கடைபிடிக்கிறார்களா? அல்லது கடைக்காரர்கள் விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் விற்பனை செய்து வருகின்றனரா? என்று நகராட்சி ஆணையர் சுபாஷினி தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விதிமுறைகள் மீறி கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்த மளிகை கடை, டீக்கடை, இரும்பு கடை உள்ளிட்ட 7 கடைகளுக்கு தலா 200 வீதம் ரூ.1,400 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.
Related Tags :
Next Story