ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனருக்கு கொரோனா
ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
51 பேருக்கு தொற்று
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே பெரம்பலூர் (தனி) தொகுதி எம்.எல்.ஏ. பிரபாகரன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனரான லலிதா (வயது 40) கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 50 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழப்பு இல்லை
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 8 பேர் நேற்று மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். நேற்றும் கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது மாவட்டத்தில் 188 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 263 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
Related Tags :
Next Story