பொதுமக்களின் வீடுகளில் கலெக்டர் கார்மேகம் ஆய்வு


பொதுமக்களின் வீடுகளில் கலெக்டர் கார்மேகம் ஆய்வு
x
தினத்தந்தி 10 Jan 2022 1:40 AM IST (Updated: 10 Jan 2022 1:40 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பரிசு பொருட்கள் தரமானதாக வழங்கப்பட்டு உள்ளதா? என்று பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று கலெக்டர் கார்மேகம் ஆய்வு நடத்தினார்.

சேலம்:-
பொங்கல் பரிசு பொருட்கள் தரமானதாக வழங்கப்பட்டு உள்ளதா? என்று பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று கலெக்டர் கார்மேகம் ஆய்வு நடத்தினார்.
பொங்கல் பரிசு தொகுப்பு
பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி, வெல்லம், பருப்பு, உளுந்து, புளி, ரவை, கோதுமை மாவு, நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய், கடுகு மற்றும் ஒரு கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வரப்படுகிறது.
இந்த நிலையில் பொங்கல் பரிசு பொருட்கள் தரமானதாக வழங்கப்படுகிறதா? என்று கலெக்டர் கார்மேகம் நேற்று மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சென்று ஆய்வு நடத்தினார்.
ஆய்வு
தொடர்ந்து நேற்று மாலை ஏற்காடு மற்றும் தலைச்சோலை, காக்கம்பாடி ஆகிய கிராமங்களுக்கு சென்றார். பின்னர் பொங்கல் பரிசு பொருட்கள் வாங்கிய பொதுமக்களின் வீடுகளுக்கு திடீரென்று நேரில் சென்று, தரமான பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளனவா? என்று ஆய்வு நடத்தினார்.

Next Story