வீட்டின் கதவை உடைத்து நகை- பணம் திருட்டு


வீட்டின் கதவை உடைத்து நகை- பணம் திருட்டு
x
தினத்தந்தி 10 Jan 2022 6:16 PM IST (Updated: 10 Jan 2022 6:16 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை- பணத்தை மர்ம நபர் திருடிச் சென்றார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை செல்வம் சிட்டியை சேர்ந்தவர் பாலச்சந்திரன் (வயது 67). இவர் கடந்த 8-ந் தேதி தனது மனைவியுடன் தூத்துக்குடியில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றாராம். மீண்டும் அவர் இரவில் வந்த போது, வீட்டின் முன்பக்க கிரில் கேட் மற்றும் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாலச்சந்திரன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது வீட்டில் பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகைகள், 150 கிராம் வெள்ளி பிள்ளையார், ரூ.18 ஆயிரத்து 800 ரொக்கப்பணம், கைக்கெடிகாரம் உள்ளிட்ட ரூ.77 ஆயிரத்து 800 மதிப்பிலான பொருட்களை மர்ம நபர் திருடிச் சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பாலச்சந்திரன் புதுக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story