பழனி திருஆவினன்குடி கோவிலுக்கு 12¾ கிலோ வெள்ளி சர விளக்கை காணிக்கையாக வழங்கிய பக்தர்


பழனி திருஆவினன்குடி கோவிலுக்கு 12¾ கிலோ வெள்ளி சர விளக்கை காணிக்கையாக வழங்கிய பக்தர்
x
தினத்தந்தி 10 Jan 2022 8:07 PM IST (Updated: 10 Jan 2022 8:07 PM IST)
t-max-icont-min-icon

பழனி திருஆவினன்குடி கோவிலுக்கு 12¾ கிலோ வெள்ளி சர விளக்கை ஈரோடு பக்தர் காணிக்கையாக வழங்கினார்.

பழனி :
பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உப கோவில்களுக்கு வரும் பக்தர்கள் காணிக்கையாக பணம், தங்கம், வெள்ளி பொருட்களை உண்டியலில் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஈரோட்டை சேர்ந்த பக்தர் கணபதி சுப்பிரமணியம் என்பவர் பழனி திருஆவினன்குடி கோவிலுக்கு 12¾ கிலோ வெள்ளி சர விளக்கை காணிக்கையாக நேற்று வழங்கினார். இதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். முன்னதாக விளக்கை கோவில் இணை ஆணையர் நடராஜனிடம், அவர் வழங்கினார். இந்த விளக்கு விரைவில் திருஆவினன்குடி கோவிலில் பயன்படுத்தப்பட உள்ளது.


Next Story