நீலகிரியில் வழிபாட்டு தலங்கள் திறப்பு
நீலகிரியில் வழிபாட்டு தலங்கள் திறப்பு
ஊட்டி
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்கள், பள்ளிவாசல்கள், ஆலயங்கள் மூடப்பட்டு, பொதுமக்கள் வழிபட அனுமதிக்கப்பட வில்லை. இதனால் கோவில்கள் முன்பு நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஞாயிற்றுக்கிழமை அன்று சி.எஸ்.ஐ. புனித தாமஸ் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் ஆன்லைன் மூலம் ஆராதனை நடந்தது. இதனை வீடுகளில் இருந்தபடி பார்த்து கலந்துகொண்டனர். நேற்று திங்கட்கிழமை என்பதால் 3 நாட்களுக்குப் பின்னர் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டது.
ஊட்டி மாரியம்மன் கோவில், ஆஞ்சநேயர் கோவில், இரட்டை பிள்ளையார் கோவில், எல்க்ஹில் முருகன் கோவில் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது. பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முககவசம் அணிந்தும் சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் பள்ளிவாசல்கள், ஆலயங்களும் திறக்கப்பட்டன.
Related Tags :
Next Story