கூடலூர் அருகே காய்கறி ஏற்றி வந்த சரக்கு லாரி கவிழ்ந்தது
கூடலூர் அருகே காய்கறி மூட்டைகளை ஏற்றிச் சென்ற சரக்கு லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் டிரைவர், கிளீனர் காயங்களு டன் உயிர் தப்பினர்.
கூடலூர்
கூடலூர் அருகே காய்கறி மூட்டைகளை ஏற்றிச் சென்ற சரக்கு லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் டிரைவர், கிளீனர் காயங்களு டன் உயிர் தப்பினர்.
காய்கறி மூட்டைகள்
கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக மலப்புரம், திருச்சூர், கோழிக் கோடு உள்பட பல மாவட்டங்களுக்கு காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏராளமான சரக்கு லாரிகளில் கூடலூர் வழியாக கொண்டு செல்லப்படுகிறது.
இந்த நிலையில் கூடலூரில் இருந்து கேரள எல்லையான கீழ்நாடுகாணி வரை சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கர்நாடகாவில் இருந்து காய்கறி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு கீழ் நாடுகாணி வழியாக மஞ்சேரிக்கு சரக்கு லாரி சென்று கொண்டிருந்தது.
லாரி கவிழ்ந்தது
அப்போது வளைவான இடத்தில் திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் சாலையோர பள்ளத்தில் காய்கறி மூட்டைகளுடன் சரக்கு லாரி கவிழ்ந்தது. உடனே அப்பகுதி மக்கள் அங்கு ஓடி வந்தனர். பின்னர் லாரிக்குள் சிக்கி காயத்துடன் போராடிக்கொண்டு இருந்த டிரைவர் முனீர் மற்றும் கிளீனர் சுலைமான் ஆகியோரை மீட்டனர்.
பின்னர் 2 பேரையும் கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக பெருந்தல்மன்னா கொண்டு செல்லப்பட்டனர்.
போலீசார் விசாரணை
தகவலறிந்த தேவாலா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மோசமடைந்த சாலையால் கட்டுப்பாட்டை இழந்த லாரி விபத்தில் சிக்கியது தெரியவந்தது. இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, கூடலூர்- மலப்புரம் சாலை மோசமாக உள்ளதால் வாகன விபத்துகள் அதிகரித்து உள்ளது. எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story