7½ பவுன் நகைகள் திருட்டு


7½ பவுன் நகைகள் திருட்டு
x
தினத்தந்தி 10 Jan 2022 9:17 PM IST (Updated: 10 Jan 2022 9:17 PM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7½ பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

சிக்கல்:
கீழ்வேளூர் அருகே  தேவூர் இருக்கை சாலையில் வசித்து வருபவர் ஜலாலுதீன் மனைவி சிராஜ் நிஷா (வயது52). இவர்  கடந்த 2-ந் தேதி  திருவாரூர் அருகே கொடிக்கால்பாளையத்தில் உள்ள  தனது மகள் வீட்டிற்கு  சென்றிருந்தார்.  இந்த நிலையில் சம்பவத்தன்று  சிராஜ் நிஷா வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர், சிராஜ் நிஷாவுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே அவர் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்த போது  பிரோவில் இருந்த 7½ பவுன் நகைகள் திருட்டு போனது தெரிய வந்தது. சிராஜ் நிஷா வீடு பூட்டி கிடந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது.  இதுகுறித்து சிராஜ் நிஷா கீழ்வேளூர்  போலீசில் புகார்  கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்

Next Story