பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் விழா


பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் விழா
x
தினத்தந்தி 10 Jan 2022 9:20 PM IST (Updated: 10 Jan 2022 9:20 PM IST)
t-max-icont-min-icon

கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடனாக விறகுகளை செலுத்தினர்.

கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடனாக விறகுகளை செலுத்தினர். 
கொண்டத்து காளியம்மன் கோவில்
ஈரோடு மாவட்டம் கோபி அருகே பாரியூரில் பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் குண்டம் மற்றும் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 30-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 
இதைத்ெதாடர்ந்து அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.
குண்டம் விழா
நாளை (புதன்கிழமை) பெண் பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடக்கிறது. 
இதற்காக கோவிலில் அமைக்கப்படும் 50 அடி நீளம் கொண்ட குண்டத்தில் முதன்முதலாக தலைமை பூசாரி ராமு என்பவர் குண்டம் இறங்குகிறார். இதையடுத்து பூசாரிகள், கோவிலின் முக்கிய  பிரமுகர்கள் குண்டம் இறங்க உள்ளனர். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் குண்டம் இறங்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 
விறகுகளை...
இதேபோல் வருகிற 14-ந் தேதி நடைெபற இருந்த தேரோட்டமும், 15-ந் தேதி நடைபெற இருந்த மலர் பல்லக்கு நிகழ்ச்சியும் கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
குண்டம் விழாவையொட்டி கோவில் முன்பு குண்டம் இறங்கும் இடத்தில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக விறகு கட்டைகளை செலுத்தி வருகிறார்கள்.

Next Story