தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ் அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
`தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புகார் பெட்டி செய்தி எதிரொலி
நெல்லை குலவணிகர்புரம் கிறிஸ்து ஆலயம் பின்புறம் செல்லும் குறிச்சி ெமயின்ரோட்டில் அடுக்குமாடி குடியிருப்பு அருகில் சாலையோரத்தில் ராட்சத கான்கிரீட் குடிநீர் குழாய் பல ஆண்டுகளாக போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது. இதுபற்றி `தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அந்தோணிராஜ் என்ற வாசகர் அனுப்பிய பதிவு பிரசுரமானது. இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த குழாயை அப்புறப்படுத்தினார்கள். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த `தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
ஒளிரும் பலகை வைக்க வேண்டும்
பத்தமடை ஆட்டோ நிறுத்தத்தில் இருந்து களக்காடு செல்லும் மூன்று வழி இணைப்பான களக்காடு எல்.எப். ரோட்டில் இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும்போது திடீரென மிளாக்கள் ரோட்டில் குறுக்கே பாய்ந்து வருகின்றன. அவை வாகனங்களில் மோதி விபத்துக்குள்ளாகிறது. எனவே, இந்த ரோட்டில் இரவு நேரத்தில் ஒளிரும் தகவல் பலகைகள் வனத்துறையால் வைக்கப்பட வேண்டும். மேலும் மின்விளக்குகள் அதிகளவில் அமைக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ரவிச்சந்திரன், பத்தமடை.
அகற்றப்படாத குப்பைகள்
நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண்-26 ல் பெருமாள்புரம் நீச்சல்குளம் தெரு கடைசி டிரான்ஸ்பார்மர் அருகில் குடியிருப்புகள் உள்ளன. இதன் அருகில் குப்பைகளை கொண்டு வந்து கொட்டுகிறார்கள். இதனால் அருகில் உள்ள வீடுகளில் வசிப்போருக்கு நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. மேலும் துர்நாற்றமும் வீசுகிறது. வெவ்வேறு இடங்களில் இருந்து இங்கு குப்பைகளை கொண்டு வந்து கொட்டுகிறார்கள். ஆனால், லாரிகளை கொண்டு வந்து அதை அப்புறப்படுத்துவது இல்லை. எனவே, குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலகிருஷ்ணன், பாளையங்கோட்டை.
புகாருக்கு உடனடி தீர்வு
ராதாபுரத்தில் சாலை குண்டும், குழியுமாக இருந்தது. இதை சீரமைக்க வேண்டும் என்று வாசகர் சுந்தர் அனுப்பிய பதிவு `குண்டும் குழியுமான சாலை' என்ற தலைப்பில் வெளியானது. இதற்கு உடனடி தீர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்துள்ளனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த `தினத்தந்தி'க்கும், நடவடிக்ைக எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
பஸ் வசதி தேவை
வடக்கு விஜயநாராயணத்தில் இருந்து போதிய பஸ் வசதி இல்லாததால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் அவதிப்படுகிறார்கள். மேலும் முதியவர்கள், பெண்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். எங்கள் ஊருக்கு போதிய பஸ் வசதி செய்து தர வேண்டும்.
-காந்தி, வடக்கு விஜயநாராயணம்.
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
முக்கூடல் பேரூராட்சி தபால் அலுவலக தெருவில் குடிநீர் குழாய் உடைந்து பல நாட்கள் ஆகி விட்டது. இதனால் தண்ணீர் வீணாக செல்கிறது. எனவே, குழாயை சீரமைத்து குடிநீர் வீணாகாமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-கருணாநிதி, வீரவநல்லூர்.
பன்றிகளால் தொல்லை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பாரதி நகர் பகுதியில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பன்றிகள் தொல்லைக்கு தீர்வு கிடைக்க வேண்டும்.
-சுப்புலட்சுமி, சங்கரன்கோவில்.
சாலையை சீரமைக்க வேண்டும்
வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் கிராமத்தில் இருந்து சண்முகாபுரம், அமுதாபுரம் ஆகிய பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.
-டெக்கான், கீழக்கலங்கல்.
திறக்கப்படாத கழிவறை கட்டிடம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகா தெற்கு திட்டங்குளம் ஊராட்சியில் பெண்களுக்காக கட்டப்பட்ட பொது கழிவறை கட்டிடம் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பொது வெளியை கழிவறை போன்று பயன்படு்த்துகிறார்கள். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, பெண்கள் கழிவறை கட்டிடத்தை பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும்.
-சரவணகுமார், தெற்கு திட்டங்குளம்.
பழுதடைந்த கட்டிடத்தால் மக்கள் அச்சம்
விளாத்திகுளம் தாலுகாவில் உள்ள காடல்குடி கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பழைய கட்டிடத்தில் போலீஸ் நிலையம் செயல்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன் போலீஸ் நிலையம் வேறு இடத்தில் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு இயங்கி வருகிறது. தற்போது பழைய கட்டிடம் பாழடைந்து மேற்கூரை தொங்கியவாறு இடிந்து விழும் நிலையில் உள்ளது. அந்த பகுதியில் சிறுவர்கள் உள்பட மக்கள் நடமாட அச்சப்படுகிறார்கள். எனவே, மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் முன் கட்டிடத்தின் மேற்கூரையை அகற்ற வேண்டும்.
-கரிகாலன், காடல்குடி.
Related Tags :
Next Story