துணி உற்பத்தி தொழிற்சாலையில் மின்மோட்டார் திருட்டு; வாலிபர் கைது
திருவள்ளூர் மாவட்டம் டெக்ஸ்டைல் கம்பெனி துணி உற்பத்தி தொழிற்சாலையில் மின்மோட்டார் திருட்டு போனது தெரியவந்தது.
திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை நடுத்தெருவை சேர்ந்தவர் சோமன் (வயது 65). இவர் கன்னிகாபுரம் வெள்ளையப்பன் நகரில் ஓசோன் கார்டன் என்ற டெக்ஸ்டைல் கம்பெனி நடத்தி வந்தார். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா நோய்த்தொற்று காரணமாக இந்த கடையை மூடிவிட்டார். இந்த நிலையில் பழுதடைந்த நிலையில் உள்ள இந்த கட்டிடத்தை சுத்தம் செய்வதற்காக நேற்று சென்று பார்த்தபோது, துணி உற்பத்தி தொழிற்சாலையில், இருந்த மின்மோட்டார் திருட்டு போனது தெரியவந்தது.
இதுகுறித்து சோமன் பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி வழக்குப்பதிவு செய்து ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள மின் மோட்டாரை திருடிய சூரியா(23) என்பவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story