புகாா் பெட்டி
தினத்தந்தி புகாா் பெட்டி
தெருவிளக்குகள் ஒளிருமா?
வில்லரசம்பட்டி அருகே உள்ள பகுதி சிவபுரம். இந்த பகுதியில் உள்ள தெருவிளக்குகள் எரியவில்லை. மேலும் இங்கு ரோடு வசதியும் சரியாக இல்லை. இதனால் இரவில் இங்குள்ள ரோட்டில் வாகனங்களில் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி விஷ பூச்சிகளின் நடமாட்டமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தெருவிளக்குகள் எரிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கார்த்திக், வில்லரசம்பட்டி.
குடிநீர் வினியோகிக்க வேண்டும்
பவானியை அடுத்த தொட்டிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட கிராமம் புதுக்காடையம்பட்டி. இங்குள்ளவர்களுக்கு காலை 6 மணி முதல் 8.30 மணி வரை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மாலையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. மாலையிலும் ஒரு மணி நேரமாவது குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், புதுக்காடையம்பட்டி.
வீணாகும் குடிநீர்
கொடுமுடி அருகே உள்ள கணபதிபாளையம் ஒத்தக்கடை ரோட்டில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் குழாயில் இருந்து குடிநீர் வெளியேறி சென்று கொண்டிருக்கிறது. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக குடிநீர் வீணாகி கொண்டிருக்கிறது. தற்போது குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ள நிலையில் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சாி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கொடுமுடி.
தார்சாலை அமைக்கப்படுமா? (படம்)
சென்னிமலை ஒன்றியம், கூத்தம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட கூத்தம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இருந்து காளிபாளையம் செல்லும் சாலையை தார் சாலையாக புதுப்பிப்பதற்காக சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு கற்கள் கொட்டப்பட்டுள்ளது. ஆனால் 60 நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரை தார் போடவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தார் சாலை அமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டி.குமார், ஆலம்பாளையம் சென்னிமலை.
Related Tags :
Next Story