மத்தூர் அருகே பெனுகொண்டாபுரம் பெரிய ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு


மத்தூர் அருகே பெனுகொண்டாபுரம்  பெரிய ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 10 Jan 2022 10:49 PM IST (Updated: 10 Jan 2022 10:49 PM IST)
t-max-icont-min-icon

மத்தூர் அருகே பெனுகொண்டாபுரம் பெரிய ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

மத்தூர், ஜன.11-
மத்தூர் அருகே பெனுகொண்டாபுரம் பெரிய ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் பெனுகொண்டாபுரம் பெரிய ஏரியில் இருந்து பாசனத்திற்காக நேற்று தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சதீஷ்குமார், தமிழ்செல்வம் எம்.எல்.ஏ., பொதுப்பணி துறை உதவி பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோர் பாசனத்திற்கு  தண்ணீரை திறந்து வைத்து மலர்தூவினர். 
இந்த நிகழ்ச்சியில் மத்தூர் ஒன்றியக்குழு தலைவர் விஜயலட்சுமி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சங்கர், ஒட்டப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சந்தோஷ்குமார், தி.மு.க. ஒன்றிய செயலாளர் வசந்த்தரசு, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி, பா.ம.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்
பின்னர் பொதுப்பணி துறை உதவி பொறியாளர் கூறுகையில், இந்த ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒட்டப்பட்டி, கொடமாண்டப்பட்டி, அந்தேரிப்பட்டி, எட்டிப்பட்டி, உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் உள்ள 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறும். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக விளைச்சல் பெற்று பயன்பெறவேண்டும் என்றார்.
பெரிய ஏரியில் இருந்து கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. முடிவில் ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்க தலைவர் சவுந்தரராஜன் நன்றி கூறினார்.

Next Story