கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டையில் பாஜனதாவினர் ஆர்ப்பாட்டம்


கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டையில் பாஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Jan 2022 5:19 PM GMT (Updated: 10 Jan 2022 5:19 PM GMT)

கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டையில் பாஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டையில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட பா.ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று பிரதமர் மோடிக்கு பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசு உரிய முறையில் பாதுகாப்பு அளிக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட பா.ஜ.க. எஸ்.சி. அணி பொதுச் செயலாளர் ரவி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தர்மலிங்கம், மாநில எஸ்.சி. அணி செயலாளர் கஸ்தூரி, மாநில பிரசார அணி செயலாளர் சாமிக்கண்ணு, மாவட்ட பொதுச்செயலாளர்கள் முருகேசன், ஜெயராமன், செந்தில், திருமலைபெருமாள், சண்முகம், நகர தலைவர் ரமேஷ், ஒன்றிய தலைவர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், பிரதமர் மோடிக்கு உரிய பாதுகாப்பு அளிக்கத் தவறியதாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் முதல்-மந்திரியை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டையில் பா.ஜ.க. பட்டியல் அணி சார்பில் பஞ்சாப் அரசை கண்டித்து நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு அணி மாவட்ட தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் நரேந்திரன், மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் பார்த்திபன், மாநில செயற்குழு உறுப்பினர் முனிராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் ரங்கநாத், கோட்ட அமைப்பு செயலாளர் நாராயணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு வழங்க தவறிய பஞ்சாப் அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கணினி பிரிவு கோட்ட செயலாளர் புட்டராஜ், நகர பொதுச்செயலாளர் சீனிவாசன், மாவட்ட துணைத்தலைவர்கள் பாப்பண்ணா, ராமச்சந்திரன், சகுந்தலா, மகளிரணி மாவட்ட தலைவி வரலட்சுமி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story