தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தர்ணா போராட்டம்


தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 10 Jan 2022 10:49 PM IST (Updated: 10 Jan 2022 10:49 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தர்மபுரி:
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
மனுக்கள் பெட்டி
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறுவதற்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மனுக்கள் பெட்டி வைக்கப்பட்டது. 
அதில் தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை போட்டனர். தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த மாரவாடி பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளங்கோவன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம் அலுவலர்கள் விசாரணை நடத்தினார்கள். 
3 சக்கர மோட்டார் வாகனம்
அப்போது சர்க்கரை நோய் பாதிப்பால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது கால்களில் ஒன்று அகற்றப்பட்டதாகவும், இதனால் நடக்க முடியாமல் தொடர்ந்து சிரமத்திற்கு உள்ளாகி உள்ள தனக்கு 3 சக்கர மோட்டார் வாகனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இளங்கோவன் கோரிக்கை விடுத்தார். 
இதுதொடர்பாக அவரிடம் கோரிக்கை மனுவை பெற்ற துறை அலுவலர்கள் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

Next Story