ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற இந்து மக்கள் கட்சியினர் 15 பேர் கைது


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 10 Jan 2022 11:19 PM IST (Updated: 10 Jan 2022 11:19 PM IST)
t-max-icont-min-icon

ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற இந்து மக்கள் கட்சியினர் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர், 
பஞ்சாப் மாநிலத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு சென்ற பிரதமர் மோடி பயணத்தில் தடை ஏற்பட்டது. இதனை கண்டித்து நேற்று கரூர் மாவட்ட இந்து மக்கள் கட்சி சார்பில் காலை 11.50 மணிக்கு கரூர் ரெயில் நிலையத்தில் கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலிலை மறித்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இதனையடுத்து கரூர் ரெயில் நிலைய நுழைவு வாயில் முன்பு- போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இந்து மக்கள் கட்சியினர் மாவட்ட தலைவர் காலனி மணி தலைமையில் கரூர் ரெயில் நிலையத்திற்கு ஊர்வலமாக வந்தனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். 
இதனால் ரெயில் நிலைய நுழைவுவாயில் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பஞ்சாப் காங்கிரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற இந்து மக்கள் கட்சியை சேர்ந்த மாநில செயலாளர் கோபு, மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றி சென்று ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.


Next Story