பெண்ணிடம் 9 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு
ராமநாதபுரத்தில் பெண்ணிடம் 9 பவுன் தாலிச்சங்கிலி பறிக்கப்பட்டது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் வல்லபை நகர் 5-வது தெருவில் வசித்து வருபவர் விஜி என்பவரின் மனைவி சுகன்யா (வயது 25). இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் நேற்று இரவு வீட்டு கதவை பூட்டுவதற்காக வந்தபோது அங்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க மர்மநபர் துண்டால் சுகன்யாவின் தலையை மூடி அவர் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுகன்யா கத்திகூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்த போது மர்ம நபர் ஓடிவிட்டார். இதுகுறித்து சுகன்யா அளித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story