விசைத்தறிகள் வேலை நிறுத்தம் காரணமாக ரூ200 கோடி காடா ஜவுளி உற்பத்தி பாதிப்பு
பல்லடம், 2-வது நாளாக விசைத்தறிகள் வேலை நிறுத்தம் காரணமாக ரூ.200 கோடி காடா ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
பல்லடம்
பல்லடம், 2-வது நாளாக விசைத்தறிகள் வேலை நிறுத்தம் காரணமாக ரூ.200 கோடி காடா ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
வேலை நிறுத்தம்
திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப் படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கூலி உயர்வு வழங்ககோரி திருப்பூர், கோவை மாவட்டத்தில் விசைத்தறியாளர்கள் நேற்றுமுன்தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். வேலை நிறுத்தத்தால் விசைத்தறி தொழிலை சார்ந்த சைசிங், நூற்பாலைகள், ஓ.இ., மில்கள், பீஸ் செக்கிங், மடிப்பு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
ரூ.200 கோடி காடா ஜவுளி உற்பத்தி பாதிப்பு
இந்த நிலையில் 2-வது நாளாக விசைத்தறிகள் வேலை நிறுத்தம் தொடர்கிறது. இதனால் விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் அதனைச் சார்ந்து இயங்கும் தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதனால் ரூ.200 கோடி அளவுக்கு காடா ஜவுளித்துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story