நகை, பணத்துடன் பள்ளி மாணவி மாயம்
நகை, பணத்துடன் பள்ளி மாணவி மாயம்
குடியாத்தம்
குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளியின் மகள் வயது 16 மாணவி. குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 5-ந் தேதி பள்ளிக்கு செல்வதாக சென்ற அந்த மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் மாணவி குறித்து எந்த தகவலும் இல்லை. அப்போது வீட்டில் பார்த்த போது வீட்டில் இருந்த 30 ஆயிரம் பணம் மற்றும் 5 பவுன் நகையை அந்த மாணவி எடுத்து சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து மாணவியின் பெற்றோர் குடியாத்தம் தாலுகா போலீசில் தனது மகளை பணம் மற்றும் நகையுடன் காணவில்லை என புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப்- இன்ஸ்பெக்டர் சிவகுமார் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story