மதுபான கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை
மதுபான கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதையொட்டியுள்ள மதுபான பார்கள் மற்றும் நட்சத்திர அந்துஸ்து உணவகங்களில் உள்ள பார்கள் ஆகிய அனைத்தும் வரும் 15-ந் தேதி திருவள்ளுவர் தினம், 18-ந்் தேதி வள்ளலார் நினைவு தினம் மற்றும் ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினம் ஆகிய 3 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மேற்கண்ட நாட்களில் மதுபான கடைகள், பார்கள், நட்சத்திர உணவங்களில் உள்ள பார்களை திறந்து மதுபாட்டில் விற்பனையில் ஈடுபடுவது தெரியவந்தால் சம்மந்தப்பட்ட விற்பனையாளர்கள், கண்காணிப்பாளர்கள், பார் உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன் பார் உரிம் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story