பொதுமக்களுக்கு பொரி கொடுத்து விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
பொதுமக்களுக்கு பொரி கொடுத்து விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு விவசாயிகள் சார்பில் பொதுமக்களுக்கு பொரி கொடுத்து நூதன போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு வாக்கடை புருஷோத்தமன் தலைமை தாங்கினார். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த நவம்பர் மாதத்தில் பெய்த தொடர் மழையால் சம்பா சாகுபடி, மணிலா, பயிறு வகைகள், தோட்டப்பயிர் சேதமாகி உள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய பார்வை குழு பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங்களை பார்வையிட்டு ரூ.4,526 கோடிக்கு சேதம் ஏற்பட்டிருப்பதாக மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது. மத்திய அரசு இடைக்கால நிதி வழங்காத நிலையில் மாநில அரசு ரூ.132 கோடி வெள்ள நிவாரண நிதிவிடுவித்துள்ளது.
இதன் மூலம் 2.65 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என அறிவித்துள்ளது. ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்க உள்ள நிதியில் பாதிப்பு பரப்பளவு குறித்தும், பயனாளிகளுக்கு சராசரியாக ரூ.5 ஆயிரம் பங்கிட்டு வங்கி கணக்கில் செலுத்த உள்ளது. மத்திய அரசிடம் நிதி பெற்று கூடுதலாக வழங்க வேண்டும். மேலும் கிசான் நிதி மோசடி போல சாகுபடி செய்யாதவர்களுக்கு வங்கிக் கணக்கில் நிவாரண நிதி வழங்குகிறார்களா? என்பதையும் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறுஅவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினார். இதில் விவசாயிகள் சம்பத், சத்யராஜ், சின்னப் பையன், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story