ராணிப்பேட்டை மாவட்டத்தில் வைகுண்ட ஏகாதசி, கோவில் விழாக்களில் பக்தர்கள் பங்கேற்க தடை


ராணிப்பேட்டை மாவட்டத்தில் வைகுண்ட ஏகாதசி, கோவில் விழாக்களில் பக்தர்கள் பங்கேற்க தடை
x
தினத்தந்தி 10 Jan 2022 7:36 PM GMT (Updated: 10 Jan 2022 7:36 PM GMT)

வைகுண்ட ஏகாதசி, கோவில் விழாக்களில் பக்தர்கள் பங்கேற்க தடை

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வைணவ கோவில்களில் வருகிற 13-ந்தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி அன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி மற்றும் இந்த மாதம் இதர கோவில்களில் நடக்க உள்ள திருவிழாக்களில் கொரோனா தொற்று பரவலால் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவு வருகிற 31-ந்தேதி வரை அமலில் உள்ளது.

மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வைணவ கோவில்களில் நடக்கும் சொர்க்கவாசல் திறப்பு மற்றும் இதர கோவில் திருவிழாக்களை வசதி கேற்ப யூ-டியூப் மூலம் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை மூலம் செய்து கொள்ளலாம். கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு பக்தர்கள், பொதுமக்கள் ஒத்துழைத்து வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
----

Next Story