வியாபாரியை மிரட்டிய தாய்-3 மகன்கள் மீது வழக்கு


வியாபாரியை மிரட்டிய தாய்-3 மகன்கள் மீது வழக்கு
x
தினத்தந்தி 11 Jan 2022 1:18 AM IST (Updated: 11 Jan 2022 1:18 AM IST)
t-max-icont-min-icon

வியாபாரியை மிரட்டிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆலங்குளம்:
ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் பீட்டர். இவர் ஆலங்குளம் மார்க்கெட்டில் கடை நடத்தி வந்தார். இவர் மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள தன்னுடைய தம்பியான வெங்காய வியாபாரி ஜெயராஜிடம் ரூ.2½ லட்சம் கடனாக வாங்கினார். பின்னர் பீட்டர் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இதையடுத்து பீட்டரின் கடையை மகன்கள் மெல்வின் (32), டைசன் (28) நடத்தி வந்தனர். அப்போது அவர்கள் சித்தப்பா ஜெயராஜிடம் வெங்காயம் வாங்கியதற்கு ரூ.8 லட்சத்து 90 ஆயிரம் பாக்கி வைத்துள்ளனர். இதையடுத்து பாக்கி பணத்தை கேட்டு ஜெயராஜ் கடந்த 12-10-2020 அன்று ஆலங்குளத்தில் உள்ள அண்ணனின் வீட்டுக்கு சென்றார்.
அப்போது அங்கிருந்த மெல்வின், டைசன், இவர்களது சகோதரர் ஆல்வின் (33), தாய் அருணாசல வடிவு (57) ஆகியோர் பணத்தை தர மறுத்து கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஜெயராஜ் புகார் செய்தார். இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார், ஆல்வின், மெல்வின், டைசன், அருணாசல வடிவு ஆகிய 4 ேபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story