நாயை விழுங்கிய மலைப்பாம்பு


நாயை விழுங்கிய மலைப்பாம்பு
x
தினத்தந்தி 11 Jan 2022 1:58 AM IST (Updated: 11 Jan 2022 11:41 AM IST)
t-max-icont-min-icon

கொட்டாம்பட்டி அருகே நாயை மலைப்பாம்பு ஒன்று உயிருடன் விழுங்கியது.

மதுரை,

கொட்டாம்பட்டி அருகே உள்ள கம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட தேனக்குடிபட்டியில் உள்ள கருங்குட்டு மலையடிவாரத்தில் இரை தேடி சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று வந்தது. அப்போது, அப்பகுதியில் சுற்றி திரிந்த நாயை கண்டதும் மலைப்பாம்பு உயிருடன் விழுங்கியது. நாயை முழுமையாக விழுங்கியதால் மலைப்பாம்பினால் அங்கிருந்து நகர்ந்து செல்ல முடியவில்லை.

இதனால் அந்த இடத்திலேயே கிடந்தது. அப்போது அப்பகுதியில் ஆடு மேய்க்க சென்றவர்கள் மலைப்பாம்பை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.  இதுகுறித்து கொட்டாம்பட்டி தீயணைப்புதுறையினர் மற்றும் வன அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் வீரணன் தலைமையிலான வீரர்கள் மலைப்பாம்பினை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

அப்போது விழுங்கிய நாயை மலைப்பாம்பு வெளியே கக்கியது.
இதையடுத்து மலைப்பாம்பை கிராம இளைஞர்கள் உதவியுடன் வனத்துறையினர் பிடித்து வனக்காப்பாளர் சங்கபிள்ளையிடம் ஒப்படைத்தனர். பின்னர் வலைசேரிபட்டியில் உள்ள மலையில் மலைப்பாம்பை வனத்துறையினர் பாதுகாப்பாக விட்டனர். 

Next Story