உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்
உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திசையன்விளை:
தமிழ்நாட்டில் உள்ள சிவ ஆலயங்களில் பழமையானது உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில். இக்கோவிலில் நேற்று தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து திருப்பள்ளி எழுச்சி, உதயமார்த்தாண்ட பூஜை, சிறப்பு அபிஷேகம் ஆகியவை நடந்தது.
அதை தொடர்ந்து கொடியேற்று விழா கொரோனா வழிகாட்டு நெறிமுறைப்படி நடந்தது. விழாவில் கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன், தேர் திருப்பணி குழு தலைவர் சிவானந்தன், செயலாளர் தர்மலிங்க உடையார், உவரி பஞ்சாயத்து துணைத்தலைவர் ராஜன் கிருபாநிதி உள்பட சிலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story