சேலம் புதிய பஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு கைதி தப்பி ஓட்டம் ஆட்டோ டிரைவர்கள் மடக்கி பிடித்தனர்
சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய கைதியை ஆட்டோ டிரைவர்கள் மடக்கி பிடித்தனர்.
சேலம்,
கைதி தப்பி ஓட்டம்
நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டையை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 28). இவரை திருட்டு வழக்கில் நாமகிரிபேட்டை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். வழக்கு விசாரணைக்காக நேற்று அவரை நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
பின்னர் சேலம் மத்திய சிறையில் மீண்டும் அடைக்க அழைத்து வந்தனர். அப்போது புதிய பஸ் நிலையத்திற்கு வந்த போது ஏழுமலை திடீரென்று போலீசாரின் பிடியில் இருந்து தப்பி ஓடினார்.
மடக்கி பிடித்தனர்
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், அவரை பிடிக்க விரட்டிச்சென்றனர். இதனிடையே கைதி தப்பி ஓடி வருவதை பார்த்த பஸ் நிலையத்தின் வெளியில் இருந்த ஆட்டோ டிரைவர்கள் சிலர் அவரை மடக்்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து போலீசார் ஏழுமலையை பிடித்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய கைதியால் நேற்று சேலம் புதிய பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story