குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 11 Jan 2022 3:01 AM IST (Updated: 11 Jan 2022 3:01 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பாடாலூர்:

சாலை மறியல்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா மங்கூன் கிராமத்தில் குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பான குறைகளை அவ்வப்போது பொதுமக்கள் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் கூறி வந்தனர்.
இந்நிலையில் நேற்றும் வழக்கம்போல் குடிநீர் வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், குடிநீர் கேட்டு மங்கூன் கிராமத்தில் உள்ள துறையூர் -பெரம்பலூர் சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுபற்றி தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்களிடம் குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் கூறியதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story