சுடுதண்ணீர் கொட்டியதில் பெண் குழந்தை சாவு


சுடுதண்ணீர் கொட்டியதில் பெண் குழந்தை சாவு
x
தினத்தந்தி 11 Jan 2022 3:05 AM IST (Updated: 11 Jan 2022 3:05 AM IST)
t-max-icont-min-icon

சுடுதண்ணீர் கொட்டியதில் பெண் குழந்தை இறந்தது.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி லட்சுமி. கோவிந்தராஜ் ஜெயங்கொண்டத்தில் ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு கீர்த்தனா, கனிஷா என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று தனது 2-வது குழந்தையான கனிஷாவை(1½ வயது) குளிக்க வைப்பதற்காக, பாத்திரத்தில் கொதிக்கும் நிலையில் இருந்த சுடுதண்ணீரை ஊற்றி வைத்துவிட்டு அதில் கலப்பதற்கு குளிர்ந்த நீரை எடுக்க குளியலறையில் இருந்து லட்சுமி வெளியே சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த குழந்தை கனிஷா சுடுதண்ணீர் இருந்த பாத்திரத்தை தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. பாத்திரத்தில் இருந்த சுடுநீர் குழந்தையின் மேலேபட்டதில் குழந்தை பலத்த காயமடைந்தது. இந்நிலையில் சத்தம் கேட்டு ஓடி வந்த லட்சுமி துடிதுடித்துக் கொண்டிருந்த குழந்தையை மீட்டு உடனடியாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டது.
அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த கனிஷா சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தாள். இந்த சம்பவம் குறித்து தா.பழூர் போலீசில் லட்சுமி கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Related Tags :
Next Story