தேனி மாவட்டத்தில் வரத்து குறைவால் பூக்கள் விலை உயர்வு


தேனி மாவட்டத்தில் வரத்து குறைவால் பூக்கள் விலை உயர்வு
x
தினத்தந்தி 11 Jan 2022 7:29 PM IST (Updated: 11 Jan 2022 7:29 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் வரத்து குறைவால் பூக்கள் விலை உயர்ந்தது.

உப்புக்கோட்டை:
தேனி மாவட்டம் உப்புக்கோட்டை, பாலார்பட்டி, கூழையனூர், பூதிப்புரம், வாழையத்துப்பட்டி, சின்னமனூர்‍, கோட்டூர், சீலையம்பட்டி ஆகிய பகுதிகளில் மல்லிகை, முல்லை, ஜாதிப்பூ, கனகாம்பரம், செண்டுப்பூ, செவ்வந்தி, ரோஜா, கோழிக்கொண்டை ஆகிய பூக்கள் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளைச்சல் அடையும் பூக்கள் தேனி, சீலையம்பட்டி, ஆண்டிப்பட்டி என அந்தந்த பகுதியில் உள்ள பூமார்க்கெட்டுகளுக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தநிலையில் தேனி மாவட்டத்தில் நிலவும் பனிப்பொழிவால் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த வாரம் ரூ.700-800-க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,500-க்கும், ரூ400-க்கு விற்பனை செய்த ஜாதிப்பூ ரூ.800-க்கும், ரூ.600-க்கு விற்பனை செய்த முல்லை ரூ.1,200-க்கும், ரூ.60க்கு விற்பனையான சம்பங்கி ரூ.80-க்கும், செண்டுப்பூ ரூ.70-க்கும், அரளி ரூ.120-க்கும், துளசி ரூ.40-க்கும், வெள்ளை செவ்வந்தி ரூ.150-க்கும் விற்பனையானது.
 

Next Story