போடியில் அரசால் தடைசெய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல்


போடியில் அரசால் தடைசெய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 11 Jan 2022 7:33 PM IST (Updated: 11 Jan 2022 7:33 PM IST)
t-max-icont-min-icon

போடியில் அரசால் தடைசெய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

போடி:
போடி நகரில் அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், காலாவதியான உணவு பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதாக  மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்றது. இதையடுத்து கலெக்டர் முரளிதரன் உத்தரவின் பேரில் மாவட்ட நியமன அலுவலர் ராகவன் தலைமையில் ‌அதிகாரிகள் நேற்று போடியில் காமராஜர் சாலை, பி.எச்.சாலை உள்பட பல்வேறு இடங்களில் 35-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை செய்தனர்.
அப்போது தடைசெய்யப்பட்ட புகையிலை, பிளாஸ்டிக் கவர்கள், உணவு பண்டங்களில் கலக்கும் கலர் பொடி உள்பட 268 கிலோ பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதில் 7 கடைகளுக்கு மொத்தம் ரூ.23 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த சோதனையில் போடி நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் சரண்யா, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மதன், மணிமாறன், சுரேஷ்கண்ணன், சக்தீஸ்வரன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்‌. பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் நகராட்சி குப்பை கிடங்கில் தீவைத்து எரிக்கப்பட்டது.

Next Story