பசியாவரம் பாலம் கட்டுமான பணி தற்காலிகமாக நிறுத்தம்


பசியாவரம் பாலம் கட்டுமான பணி தற்காலிகமாக நிறுத்தம்
x
தினத்தந்தி 11 Jan 2022 8:06 PM IST (Updated: 11 Jan 2022 8:06 PM IST)
t-max-icont-min-icon

பசியாவரம் பாலம் கட்டும் இடத்தில் இருந்து ஏரியில் தவறி விழுந்த மீனவர் பலியானார். இது குறித்து எம்.எல்.ஏ. ஆய்வுக்கு பின்னர் கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.


மீனவர் பலி

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியில் இருந்து பசியாவரம் கிராமம் வரை ஏரி வழியாக பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இங்கு 20 ராட்சத தூண்கள் தரை மட்டத்திற்கு மேலாக கட்டப்பட உள்ளது. இந்த பணிக்காக மண் சாலையும் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் எடமணிகுப்பம் காலனியில் வசித்து வந்த மீனவரான ராஜேஷ் (வயது 38) நேற்று பாலம் அமைக்கும் பகுதி வழியாக நடந்து சென்று கொண்டு இருந்தபோது திடீரென ஏரியில் தவறி விழுந்து பலியானார்.

தற்காலிக நிறுத்தம்

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர் பாலம் கட்டும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு திரண்ட மீனவர்கள் பாலம் கட்டும் பணிகளை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டனர்.

பின்னர் பாலம் கட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த ஆய்வின் போது மாவட்ட கவுன்சிலர் தேசராணிதேசப்பன், மீஞ்சூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரமேஷ்ராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story