பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அத்தியூர் வாரச்சந்தையில் ரூ 2 கோடிக்கு ஆடுகள் விற்பனை


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  அத்தியூர் வாரச்சந்தையில்  ரூ 2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
x
தினத்தந்தி 11 Jan 2022 4:09 PM GMT (Updated: 11 Jan 2022 4:09 PM GMT)

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அத்தியூர் வாரச்சந்தையில் ரூ 2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது

ரிஷிவந்தியம்

வாரச்சந்தை

ரிஷிவந்தியம் ஒன்றியம் அத்தியூர் சந்தை மேடு பகுதியில் கால்நடை வாரச்சந்தை நடந்து வருகிறது. இங்கு விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடு, மாடுகளை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம். இதை உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களை சேர்ந்த வியாபாரிகளும் வாங்கி செல்வது வழக்கம். முக்கிய விஷேச மற்றும் பண்டிகை காலங்களில் வியாபாரம் களை கட்டும். அந்த வகையில பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று நடைபெற்ற வாரச்சந்தையில்  விவசாயிகள் அதிக அளவில் ஆடுகளை விற்பதற்காக   கொண்டு வந்தனர். ஆனால் வருகிற ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் காணும் பொங்கல் அன்று இறைச்சி கடைகள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வெளி மாநில, மாவட்ட வியாபாரிகள் குறைந்த எண்ணிக்கையிலேயே வருகை தந்தனர்.

ரூ.2 கோடிக்கு விற்பனை

இருப்பினும் சந்தையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையானது. இதன் மதிப்பு சுமார் ரூ.2 கோடி ஆகும். கொரோனா தொற்று காலத்தில் சந்தையை நடத்துவதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Next Story