டி.வி., தொலைபேசி வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம்
நாகையில் டி.வி., தொலைபேசி வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் திறந்து வைத்தார்.
நாகப்பட்டினம்:
நாகையில் டி.வி., தொலைபேசி வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் திறந்து வைத்தார்.
திறப்பு விழா
நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டி.வி., தொலைபேசி வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையம் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி மையத்தை திறந்து வைத்தார். தமிழ்நாடு மீன்வளர்ச்சிக்கழக தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் அருண் தம்புராஜ் கூறியதாவது:-
செல்லூர் கிராமத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 250 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தினை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
டி.வி., தொலைபேசி வசதி
அதனைத்தொடர்ந்து வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட ஆசிரியர் பயிற்சி மையத்தில் 67 படுக்கை வசதி கொண்ட கொரோனா சிசிக்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 24 மணி நேரமும் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளனர். கொரோனா நோய் தொற்றின் தன்மையை ஏ மற்றும் பி என பிரித்து உரிய சிகிச்சை அளிக்கப்படும்.
இந்த மையத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் பொழுது போக்கிற்காக டி.வி. மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்வதற்கு தொலைபேசி வசதி உள்ளிட்டவை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சகிலா, உதவி கலெக்டர் மணிவேலன், தாசில்தார் ஜெயபாலன், மாவட்ட கவுன்சிலர் சரபோஜி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story