தரம் உயர்த்தப்பட்ட உளுந்தூர்பேட்டை திருக்கோவிலூர் நகராட்சிகளுக்கான வாக்காளர் பட்டியல் கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டார்
தரம் உயர்த்தப்பட்ட உளுந்தூர்பேட்டை திருக்கோவிலூர் ஆகிய நகராட்சிகளுக்கான வாக்காளர் பட்டியலை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டார்
கள்ளக்குறிச்சி
வாக்காளர் பட்டியல்
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தரம் உயர்த்தப்பட்ட உளுந்தூர்பேட்டை மற்றும் திருக்கோவிலூர் நகராட்சிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஸ்ரீதர் வெளியிட்டார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
திருக்கோவிலூர் நகராட்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை மற்றும் திருக்கோவிலூர் ஆகிய 2 பேரூட்சிகள் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. எனவே கடந்த நவம்பர் 1-ந் தேதி அன்று இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட சட்டமன்ற ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வாக்காளர் பட்டியலில் திருக்கோவிலூர் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பில் 12 ஆயிரத்து 698 ஆண் வாக்காளர்கள், 13 ஆயிரத்து 544 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 13 பேர் என மொத்தம் 26 ஆயிரத்து 255 வாக்காளர்கள் உள்ளனர்.
உளுந்தூர்பேட்டை
அதேபோல் உளுந்தூர்பேட்டை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பில் 9,403 ஆண் வாக்காளர்கள், 9,873 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 4 பேர் என மொத்தம் 19,280 வாக்காளர்கள் உள்ளனர். தகுதியுள்ள அனைவரும் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (ஊரகவளர்ச்சி) மாதேஸ்வரன், அலுவலக மேலாளர் ஏகாம்பரம், தேர்தல் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் மற்றும் அனைத்து நகர்ப்புற தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story