கடன் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக விவசாயிகள் புகார்
ராதாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக விவசாயிகள் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து முறையாக விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரி தெரிவித்தார்.
திருவண்ணாமலை
ராதாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக விவசாயிகள் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து முறையாக விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரி தெரிவித்தார்.
முறைகேடுகள்
திருவண்ணாமலை சூர்யா நகர் பகுதியைச் சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதி சரவணன் தலைமையிலான விவசாயிகள் நார்த்தாம்பூண்டி சிவா, ஜெயகாந்தன் உள்ளிட்டோர் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தண்டராம்பட்டு தாலுகாவில் ராதாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் ஒரே நபருக்கு அங்கத்தினர் எண் மாற்றம் செய்தும், ஒன்றுக்கும் மேற்பட்ட கடன் பெற தகுதியினை மீறி கடன் வழங்கி முறைகேடுகள் மற்றும் கையாடல்கள் நடைபெற்றுள்ளது.
மேலும் இந்த கூட்டுறவு சங்கத்தில் ஏற்கனவே பயிர் கடன் தள்ளுபடி செய்ததில் ரூ.1 கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளது.
எனவே இதுகுறித்து அதிகாரிகளை கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு இச்சங்கத்தில் முறைகேடுகள் ஏற்படுவதை தவிர்க்க வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விசாரணை நடத்தப்படும்
இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் திருவண்ணாமலை மண்டல இணைப்பதிவாளர் ராஜ்குமாரிடம் கேட்டபோது, இச்சங்கத்தில் முறைகேடுகள் எதுவும் நடைபெற்று உள்ளதா என்பது குறித்து விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டு முறையாக விசாரணை நடத்தப்படும் என்றார்.
Related Tags :
Next Story