மயிலம் அருகே தண்ணீரில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி


மயிலம் அருகே தண்ணீரில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 11 Jan 2022 10:27 PM IST (Updated: 11 Jan 2022 10:27 PM IST)
t-max-icont-min-icon

தொண்டி ஆற்றை கடந்தபோது பரிதாபம்

மயிலம், 
மயிலம் அருகே பாதிராப்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் ராஜசேகர்(வயது 20). விழுப்புரம் அரசு கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று மதியம் அதேஊரில் உள்ள தனக்கு சொந்தமான வயல் பணிகளை பார்வையிட சென்றார். பின்னர் அவர் விவசாய  என்ஜினுக்கு டீசல் வாங்குவதற்காக வயலின் அருகே செல்லும் தொண்டி ஆற்றை நீந்தியபடி கடக்க முயன்றார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த வயல் பணியில் ஈடுபட்டவர்கள் ஆற்றில் இறங்கி ராஜசேகரை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்த தகவலின்பேரில் விக்கிரவாண்டி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் தேடி ராஜசேகரை மீட்டு, சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு  சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ராஜசேகர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த பரிதாப சம்பவம் குறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story