கிருஷ்ணகிரி அருகே திருமணமான ஒரே மாதத்தில் புதுப்பெண்ணுக்கு கொலை மிரட்டல்-கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு


கிருஷ்ணகிரி அருகே திருமணமான ஒரே மாதத்தில் புதுப்பெண்ணுக்கு கொலை மிரட்டல்-கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 11 Jan 2022 10:34 PM IST (Updated: 11 Jan 2022 10:34 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அருகே திருமணமான ஒரே மாதத்தில் புதுப்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கணவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரிய கோட்டப்பள்ளியை சேர்ந்தவர் பானுபிரியா என்கிற அர்ச்சனா (வயது 23). இவரும், அதேபகுதியை சேர்ந்த கார் டிரைவர் யுவராஜ் (26) என்பவரும் காதலித்து வந்தனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த அவர்கள் 2 பேரும் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர். அர்ச்சனா, யுவராஜ் வீட்டில் வசித்து வந்தார். இவர்களின் திருமணத்தை யுவராஜின் தாய் அமுதவள்ளி (48), அண்ணன் பார்த்திபன் (31) ஆகியோர் ஏற்று கொள்ளவில்லை. இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு வந்தது. மேலும் அர்ச்சனாவுடன் தகராறு செய்து, அவரை சாதி பெயரை கூறி திட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அர்ச்சனா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். மேலும், இதுகுறித்து அவர் கிருஷ்ணகிரி டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் யுவராஜ், அமுதவள்ளி, பார்த்திபன் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story