தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை காப்பாற்ற குதித்த தாய் மீது ரெயில் மோதியது. அதிர்ஷ்டவசமாக இருவரும் உயிர் பிழைத்தனர்
தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்ற குதித்த தாய் மீது ரெயில் மோதியது. ரெயில் என்ஜினை உடனே டிரைவர் நிறுத்தியதால் அதிர்ஷ்டவசமாக இருவரும் உயிர் பிழைத்தனர்.
காட்பாடி
தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்ற குதித்த தாய் மீது ரெயில் மோதியது. ரெயில் என்ஜினை உடனே டிரைவர் நிறுத்தியதால் அதிர்ஷ்டவசமாக இருவரும் உயிர் பிழைத்தனர்.
தண்டவாளத்தில் விழுந்த கைக்குழந்தை
வேலூர் மாவட்டம் காட்பாடி பள்ளிக்குப்பம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் இவரது மனைவி யுவராணி (வயது 37). இவர் 9 மாத ஆண் கைக்குழந்தையுடன் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, நடைமேடையில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை திடீரென தண்டவாளத்தில் தவறி விழுந்து விட்டது.
அதைப் பார்த்து பதறிய யுவராணி தண்டவாளத்தில் குதித்து தனது குழந்தையை தூக்கிக்கொண்டு ஏறும்போது அந்த வழியே வந்த எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் யுவராணி மீது மோதியது.
அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்
இதில் தலையில் பலத்த காயத்துடன் யுவராணி கீழே விழுந்தார். கைக்குழந்தையும் தண்டவாளத்தில் விழுந்தது. உடனடியாக ரெயில் டிரைவர் ரெயில் என்ஜினை நிறுத்தினார்.
அதைத் தொடர்ந்து காட்பாடி ரெயில்வே போலீசார் தண்டவாளத்தில் விழுந்து கிடந்த தாய் மற்றும் கைக்குழந்தையை மீட்டனர்.
பின்னர் கைக்குழந்தையுடன் யுவராணியை வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சேர்த்தனர்.
ரெயில்வே தண்டவாளத்தில் கைக் குழந்தை மற்றும் தாய் சிக்கி அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பிய சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story