ஆம்பூர் அருகே மண்ணுக்குள் புதைந்த விவசாய கிணறு
மண்ணுக்குள் புதைந்த விவசாய கிணறு
ஆம்பூர்
ஆம்பூர் அருகே கிணறு மண்ணுக்குள் புதைந்ததால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பெரியவரிக்கம் பகுதியை சேர்ந்தவர் ராமு. விவசாயியான இவர் அதே பகுதியில் விவசாய நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார். இவரது விவசாய நிலத்தில் பழைய கிணறு ஒன்று உள்ளது.
நேற்று முன்தினம் அந்த கிணற்றில் பலத்த சத்தம் கேட்டது. விரைந்து சென்று பார்த்தபோது கிணற்றின் பக்கவாட்டில் கட்டப்பட்டிருந்த செங்கல் சுவருடன் கிணறு மண்ணுக்குள் புதைந்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.உடனடியாக ராமு குடும்பத்தினர் மற்றும் அங்கிருந்தவர்கள் அங்கிருந்து வெளியேறினார்.
அவர்கள் வெளியேறிய சிறிது நேரத்தில் கிணறு முழுவதும் புதைந்து போனதுடன் அங்கிருந்த மின் கம்பமும் அப்படியே புதைந்தது.
தகவலறிந்து வந்த மின் வாரிய பணியாளர்கள் அப்பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆம்பூர் சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து விவசாய நிலங்களில் உள்ள கிணறுகள் புதைந்து போகும் சம்பவங்களால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story